ஜப்பானில் பிரபலமான ஹொட்டல் ஒன்றில் ஆணின் தலை இல்லாத நிர்வாண சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஒரு மருத்துவர் மற்றும் அவரது மகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆணின் தலை இல்லாத நிர்வாண சடலம்
திகிலை ஏற்படுத்தும் இந்த சம்பவமானது ஜூலை முதல் வாரத்தில் சப்போரோ மாவட்டத்தில் சுசுகினோ பகுதியிலேயே நடந்துள்ளது. வழக்கமான சுத்தம் செய்யும் நடவடிக்கையின் போது குறிப்பிட்ட அறையின் குளியலறையில் ஆணின் தலை இல்லாத நிர்வாண சடலம் கண்டு ஹொட்டல் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
மட்டுமின்றி, அந்த உடலின் தலையை அப்பகுதியில் எங்கும் காணாமல் திணறினர். இந்த நிலையில், திங்கட்கிழமை தொடர்புடைய விவகாரத்தில் மருத்துவர் ஒருவரும் அவரது மகலும் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பொலிசார் தெரிவிக்கையில், ஹொட்டலில் இருந்து வெட்டப்பட்ட தலையுடன் சந்தேக நபர்கள் வெளியேறி, சாலையோரத்தில் தலையை மறைவு செய்தனர் என்றே குறிப்பிடுகின்றனர்.
மேலும், இந்த கோர சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து கைதான மருத்துவர் 59 வயதான ஒசாமு தமுரா மற்றும் அவரது 29 வயது மகள் ரூனா ஆகியோரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கூரான ஆயுதத்தால் குத்தப்பட்டு
மட்டுமின்றி, கொல்லப்பட்ட நபர் 62 வயதான ஹித்தோஷி ஊரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். ரூனா மற்றும் ஊரா ஆகிய இருவரும் அறிமுகமானவர்கள் எனவும், ஆனால் தற்போது கைதாகியுள்ள இருவரும் கொலை செய்ய தூண்டியது தொடர்பில் விசாரிக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜூலை 1ம் திகதி ரூனா மற்றும் ஊரா ஆகிய இருவரும் இரவு 10.50 மணியளவில் அந்த ஹொட்டலுக்கு சென்றதாகவும், ஆனால் நள்ளிரவு 2 மணிக்கு ரூனா மட்டும் ஹொட்டலில் இருந்து வெளியேறியதாக பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
உளவியல் சிகிச்சை மருத்துவரான ஒசாமு சம்பவத்தன்று தமது மகள் ரூனாவை ஹொட்டலில் இறக்கிவிட்டு, பின்னர் அழைத்துச் சென்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். மேலும் உடற்கூறு ஆய்வில், கூரான ஆயுதத்தால் குத்தப்பட்டு, அதன் காரணமாக ரத்தம் வெளியேறியதால் மரணம் நேர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, மருத்துவர்கள் பயன்படுத்தும் கத்தியால் ஊராவின் தலை வெட்டப்பட்டுள்ளது. சம்பவத்த்னறு ரூனாவுடன் ஹொட்டலுக்கு சென்ற ஊரா, பெண்கள் உடையில் சென்றதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.