Wednesday, November 29, 2023
spot_img
Homeஉலகம்வெடித்து சிதறிய எண்ணெய் டேங்கர்! கர்ப்பிணி உட்பட 20 பலியான சோகம்..அதிர்ச்சி காட்சிகள்

வெடித்து சிதறிய எண்ணெய் டேங்கர்! கர்ப்பிணி உட்பட 20 பலியான சோகம்..அதிர்ச்சி காட்சிகள்

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 20 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிய வெடிப்பு

ஒண்டோ மாகாணத்தின் ஓரேயில் எண்ணெய் டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. லாகோஸ்-பெனின் விரைவுச் சாலையில் ஏற்பட்ட இந்த வெடிப்பினால், தடித்த கருப்புப் புகையுடன் பாரிய தீ உண்டானது.

இது முழுப் பகுதியையும் சூழ்ந்த நிலையில், அரசின் உத்தரவுப்படி பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 

20 பேர் பலி

கர்ப்பிணி மற்றும் 3 குழந்தைகள் உட்பட 20 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நபர் ஒருவர் வைத்திருந்த தொலைபேசியினால் ஏற்பட்ட தீப்பொறியால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதற்கிடையில், எண்ணெய் டேங்கர் வெடித்து சிதறிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.  

RELATED ARTICLES

Most Popular