Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைமுல்லைத்தீவில் இளைஞர்கள் உண்ணாவிரதம்!

முல்லைத்தீவில் இளைஞர்கள் உண்ணாவிரதம்!

முல்லைத்தீவு கைவேலி பகுதியில் வனவள திணைக்களத்தினால் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகளுக்கு எல்லையிடப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கும் வன வளத் திணைக்களத்திற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

2012 ஆம் ஆண்டு கைவேலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது குறித்த பகுதியை வனவள திணைக்களம் எல்லைக் கற்கள் இட்டு வனப்பகுதியாக்கி விட்டனர்

இவ்வாறான பின்னணியில் மக்கள் வாழ்ந்த வீடுகள், கட்டுக் கிணறுகள், கட்டடங்கள், பயன்தரு மரங்கள் உள்ள கைவேலி பகுதியில் காணிகள் வீடுகள் அற்ற சுமார் 20 குடும்பங்கள் பலகாலமாக குடியேறி வாழ முயற்சித்து வந்த அங்கு சென்று கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் குறித்த பகுதிக்குச் சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள் அங்கு மக்கள் போட்ட கொட்டில்களை அகற்றி கொழுத்துவதற்காக மண்ணெண்ணையுடன் வருகை தந்ததாகவும் பெண்கள் தனிமையில் இருந்த கொட்டில்களில் சென்று முன்னாள் போராளியான பெண் ஒருவர் மீதும் ஆண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில் தமக்கு தமது காணிகள் வேண்டும் என வலியுறுத்தி நான்கு இளைஞர்கள் கைவேலி பகுதியில் உண்ணாவிரதம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக இவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular