Sunday, December 3, 2023
spot_img
Homeஉலகம்திடீரென இடிந்து விழுந்த பாடசாலை உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை ! 11 பேருக்கு நேர்ந்த சோகம்

திடீரென இடிந்து விழுந்த பாடசாலை உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை ! 11 பேருக்கு நேர்ந்த சோகம்

வடகிழக்கு சீனாவில் கிகிஹார் நகரில் உள்ள நடுநிலைப் பாடசாலை உடற்பயிற்சி கூடத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்றைய தினம் காலை (24-07-2023) காலை 7 மணியளவில் நடந்ததாக தெரிகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த வார இறுதியில் சீனாவின் பல பகுதிகளில் கடும் மழை பெய்தது. இதன்போது உடற்பயிற்சி கூடத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது,

இதன்போது, பாடசாலை உடற்பயிற்சி கூடத்தில் 19 பேர் உள்ளே இருந்ததாகவும், அதில் 4 பேர் தப்பிய நிலையில் 15 பேர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் மீட்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் இன்று . பலியானவர்களில் பலர் குழந்தைகள் என நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

எனினும், இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும், மழைநீரை உறிஞ்சும் வகையில் பெர்லைட் என்ற கனிமப் கட்டுமானப் பொருளை கூரையின் மீது குவிக்கப்பட்டிருப்பது விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular