Wednesday, November 29, 2023
spot_img
Homeகனடாகனடாவில் அடைக்கலம் கோருவதற்காக சிலர் பயன்படுத்தும் புதிய வழி

கனடாவில் அடைக்கலம் கோருவதற்காக சிலர் பயன்படுத்தும் புதிய வழி

மாநாடு ஒன்றுக்காக கனடா வந்த பிரதிநிதிகள் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர்.

கனடாவில் மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்த பிரதிநிதிகளில் 15 வீதமானவர்கள் புகலிடம் கோரியுள்ளனர்.

சர்வதேச எயிட்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்தவர்களில் 15 வீதமானவர்கள் புகலிடம் வழங்குமாறு கோரி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.

எயிட்ஸ் மாநாட்டில் பங்கேற்ற 251 வெளிநாட்டுப் பிரஜைகள் கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.

சர்வதேச ரீதியாக நடைபெறும் நிகழ்வுகளில் நாடுகளை பிரதிநிதித்துவம் செய்து கனடா வரும் சிலர் இவ்வாறு புகலிடக் கோரிக்கைக்காக விண்ணப்பம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

Most Popular