Wednesday, November 29, 2023
spot_img
Homeஉலகம்ரஷ்ய படைக்குள் கடும் மோதல்!

ரஷ்ய படைக்குள் கடும் மோதல்!

ரஷ்ய இராணுவத்தின் லெப்டினன்ட் கர்னலை ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் படை சிறைப்பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பக்முத்-தில் இருந்து வாக்னர் படைகுழு வெளியேறும் வழியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்ததாக வாக்னர் படை குழுவின் தலைவர் பிரிகோஜின்(Prigozhin) குற்றம்சாட்டியிருந்தார்.

வாகனர் படைகுழு சிறைபிடிப்பு

இந்நிலையில் பக்முத் இருந்து வெளியேறும் போது வாக்னர் PMC படை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ரஷ்ய இராணுவத்தின் 72வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் கர்னல் வினிவிடின்-ஐ(Vinivitin) வாகனர் படைகுழு சிறைபிடித்துள்ளது.

இதன்போது சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவ அதிகாரியிடம் வாக்னர் குழு வீரர்கள் கேள்வியொழுப்புவது போன்ற காணொளியும் வெளியாகியுள்ளது.

இந்த காணொளியில் வாக்னர் படை குழு மீது எதற்காக தாக்குதல் நடத்த உத்தரவிட்டீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டமைக்கு மதுபோதையில் இவ்வாறு உத்தரவிட்டதாக லெப்டினன்ட் கர்னல் வினிவிடின்  தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular