கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறை நிலையத்தில் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தான் கொழும்பிற்கு பிரவேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மருதங்கேணி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.