Thursday, November 30, 2023
spot_img
Homeஇலங்கைகொழும்பில் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த பெண்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பில் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த பெண்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்த நிதிக்குற்றச்சாட்டில் சிக்கிய திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர் வாகனம் ஒன்றை வழங்குவதாக உறுதியளித்து மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து ரூ.80 இலட்சம் ரூபா பணத்தினை பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திலினி பிரியமாலி நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதன்போது அவர் சார்பில் முன்னிலையான அவரது சட்டத்தரணி சுகயீனம் காரணமாக திலினி பிரியமாலி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்ததையடுத்து, வழக்கை ஆகஸ்ட் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

மேலும், அன்றைய தினம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular