Sunday, December 3, 2023
spot_img
Homeவிளையாட்டுஆசிய கனிஷ்ட தடகளப்போட்டி பதக்கப்பட்டியலில் இலங்கைக்கு முக்கிய இடம்

ஆசிய கனிஷ்ட தடகளப்போட்டி பதக்கப்பட்டியலில் இலங்கைக்கு முக்கிய இடம்

தென் கொரியாவில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகளப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட 5 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் இலங்கை நேற்று (5) பிற்பகல் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை இதுவரை இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

400 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணியும் பதக்கம் வென்றுள்ளது. அந்த அணியில் தருஷி கருணாரத்ன, ஜெயஷி உத்தரா, வினோத் ஆரியவன்ச மற்றும் ஷெஹான் கிலாங்கா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தருஷி கருணாரத்ன இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular