Saturday, December 9, 2023
spot_img
Homeஉலகம்ரஷ்யாவின் தாக்குதலால் கடும் கோபத்தில் ஜெலென்ஸ்கி! பகிரங்கமாக வெளியிட்டுள்ள கருத்து

ரஷ்யாவின் தாக்குதலால் கடும் கோபத்தில் ஜெலென்ஸ்கி! பகிரங்கமாக வெளியிட்டுள்ள கருத்து

உக்ரைனின் மத்திய நகரமான டினிப்ரோவில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் ரஷ்யா மீண்டும் ஒரு பயங்கரவாத நாடு என்பதை நிரூபித்துள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஜெலென்ஸ்கியின் கருத்து

தனது டெலிகிராம் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே ஜெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கு இடையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைன் இராணுவப் படைகள் பொதுமக்களை குறிவைப்பதை தவிர்த்து வருகிறது எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் நிலைப்பாடு

குறித்த தாக்குதல் ரஷ்ய இராணுவத்தால் நடத்தப்பட்டது என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் ரஷ்ய இராணுவ அதிகாரிகளிடம் இருந்து ஏவுகணை தாக்குதல் தொடர்பில் எந்த கருத்துக்களும் வெளியிடப்படவில்லை. 

RELATED ARTICLES

Most Popular