Sunday, December 3, 2023
spot_img
Homeஇலங்கைஇரண்டு மாதங்களில் எரிபொருள் ஒதுக்க முறைமையை நீக்க முடியும்

இரண்டு மாதங்களில் எரிபொருள் ஒதுக்க முறைமையை நீக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் எரிபொருள் ஒதுக்க முறைமையை நீக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைத்திருத்தம் முன்னெடுக்கப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மாத இறுதியில் எரிபொருள் முன்பதிவை தாமதமாக்குகின்றனர்.

அவர்களுக்கு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நிரப்பு நிலையங்களில், QR முறைமை நடைமுறையில் உள்ளதால் எரிபொருளுக்காக வரிசைகள் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு மாதங்களில், 150 நிரப்பு நிலையங்களுடன் சினோபெக் நிறுவனம் விநியோக நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது.

குறித்த நிறுவனம் விநியோகத்தை ஆரம்பித்ததன் பின்னர், அது தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்கும்.

இதையடுத்து, தற்போது நடைமுறையில் உள்ள QR குறியீட்டு முறைமை நீக்கபடும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.


RELATED ARTICLES

Most Popular