மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து நேற்று மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் உள்ள பண்டிக்ஸ் வீதியினை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கல்லடி பாலத்திற்கு அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.