Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கையாழில் பரீட்சை எழுதி விட்டு திரும்பிய மாணவிகளிடம் சேட்டை - மாணவன் மீது தாக்குதல்

யாழில் பரீட்சை எழுதி விட்டு திரும்பிய மாணவிகளிடம் சேட்டை – மாணவன் மீது தாக்குதல்

சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்ற முற்பட்ட மாணவரை இளைஞர்கள் குழுவொன்று தலைக்கவசத்தால் தாக்கியுள்ளது.

நெல்லியடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதி விட்டு , வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் , பாடசாலைக்கு அருகில் உந்துருளிகளில் நின்ற இரு இளைஞர்கள் சேட்டை விட்டதுடன், விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம்

இதன்போது பரீட்சை எழுதிவிட்டு வந்த சக மாணவன் இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் முகமாக செய்யப்பட்ட போது , மாணவனை தலைக்கவசத்தால் தாக்கி விட்டு அவ்விடத்தை இருந்து தப்பி சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளால் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து , விரைந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் உந்துருளி உரிமையாளரை கைது செய்ததுடன் , அவரது உந்துருளியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன்போது அவருடன் சென்ற மற்றைய நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

மேலும், பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகில் கூடும் இளைஞர்கள் மாணவிகளுடன் பல்வேறு விதமான சேட்டைகளை புரிவதாகவும் , மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்நிலையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதினை தொடர்ந்து , சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாரின் கண்காணிப்பு இருக்கும் எனவும் , ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

RELATED ARTICLES

Most Popular