முதன் முதலாக ஒரு சாதாரண குடிமகன் உள்பட மூன்று பேரை சீனா விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய 3-வது நாடு சீனா ஆகும்.
இந்த நடவடிக்கைக்காக விண்வெளி துறையில் சீனா கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளது.
அந்தவகையில் 400 கி.மீ. உயரத்தில் உள்ள தனது விண்வெளி நிலையமான தியான்ஹேவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா முடிவு செய்தது.
இதன்படி, சீனாவின் ஜியுகுவான் செயற்கை கோள் ஏவுதளத்திலிருந்து நேற்று காலை (31-05-2023) ஷென்சோ-16 என்ற செயற்கை கோள் அனுப்பப்பட்டது.
து சீனாவின் 4-வது மனித விண்வெளி பயணம் ஆகும். ஆனால் இந்தமுறை முதன் முதலாக ஒரு சாதாரண குடிமகன் உள்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த ஷென்சோ-16 என்ற செயற்கை கோளானது 10 நிமிடம் கழித்து ராக்கெட்டில் இருந்து பிரிந்து சுற்றுப்பாதையில் நுழைந்தது.
செயற்கைகோள் ஏவுதல் பணி முழு வெற்றி பெற்றதாகவும், அதில் உள்ள 3 பேரும் நல்ல நிலையில் உள்ளதாகவும் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த 3 பேரும் 5 மாதங்கள் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வு பணி மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.