Sunday, December 3, 2023
spot_img
Homeஇலங்கைபிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற நபருக்கு நேர்ந்த அவலம்!

பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற நபருக்கு நேர்ந்த அவலம்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற  அதிசொகுசு பயணிகள் பேருந்தில்  பிரித்தானியாவில் இருந்து யாழ்வந்த  நபர் ஒருவர்  இடைநடுவில் இறக்கிவிடப்பட்ட சம்பவம்  வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 பயணியின் ஆதங்கம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த குறித்த நபரை பேருந்தின் நடத்துநர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்காமல் வேறு ஒரு இடத்தில் இறங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட  தெரிவித்துள்ளார்.

பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பொழுது தான் இறங்க வேண்டிய இடத்தின் ஊடாகவே பேருந்து பயணிக்கும் எனத் தெரிவித்தே தனக்கு பயணச்சீட்டு வழங்கப்பட்டட்தாகவும் அவர்  தெரிவித்தார்.

இந்நிலையில் ,  அது தொடர்பில் அவர்   கேட்டபோது  பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்  அவமரியாதைக்கு   செய்து  நடு வீதியில் இறக்கிவிட்டதாகவும் அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.

 இந்நிலையில் பேருந்தில் ஏறும் பயணிகள் நடத்துனர் ஓட்டுநரை   நம்பி பெறுமதியான ஆவணங்களுடன் பேருந்தில் ஏறும் மக்களை இவ்வாறு இடநடுவில் இறக்கிவிட வேண்டாம் என தனது ஆதங்கத்தையும் அவர்  வெளிப்படுத்தியுள்ளார். 

RELATED ARTICLES

Most Popular