Wednesday, November 29, 2023
spot_img
Homeஉலகம்நீண்ட தூர இலக்குகளை தாக்கும் டாரஸ் கப்பல் ஏவுகணைகள்: ஜேர்மனியிடம் உக்ரைன் கோரிக்கை

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் டாரஸ் கப்பல் ஏவுகணைகள்: ஜேர்மனியிடம் உக்ரைன் கோரிக்கை

ஜேர்மனி டாரஸ் கப்பல் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க வேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மன் ஆயுதங்கள் பயன்படுத்த கூடாது

உக்ரைன் மீதான ரஷ்யாவின் மூன்று நாட்கள் தொடர் வான்வழி தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக சமீபத்தில் உக்ரைன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சர்வதேச சட்டத்தின் பார்வையில் நியாயமானது என்றும், முழுநீளப் போரில் தற்காப்பிற்காக ரஷ்ய நிலப்பரப்பை உக்ரைன் தாக்க முடியும் என்று ஜேர்மன் தரப்பு கருத்து தெரிவித்து இருந்தது.

ஆனால் ரஷ்ய நிலப்பரப்பில் நடத்தப்படும் இத்தகைய தாக்குதலுக்கு ஜேர்மன் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்த கூடாது என்றும் குறிப்பிட்டு உள்ளது.  

டாரஸ் கப்பல் ஏவுகணைகள்

கோரிக்கை இந்நிலையில் 500கிலோமீட்டர் தூரம் வரையிலான தாக்குதல் திறன் கொண்ட டாரஸ் கப்பல் ஏவுகணைகளை(Taurus cruise missiles) ஜேர்மனி வழங்க வேண்டும் என்று உக்ரைன் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. 

ஆனால் இது போன்ற நீண்ட தூர ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கப்படுமா என்று ஜேர்மன் அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த செய்தியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதியை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular