இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை இன்றைய தினம் ஆற்றவுள்ளார்.
நாட்டில் உள்ள சகல பொதுமக்களையும் தெளிவுபடுத்துவதற்காக குறித்த விசேட உரையை இன்றிரவு 8 மணியளவில், நிகழ்த்தவுள்ளார்.
இதன்மூலம், தேசிய மாற்றத்திற்கான கொள்கைத்திட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவைப்பெற முடியும் என்பதுடன், எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்கான செயல்பாட்டு முன்மொழிவுகளும் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட உள்ளன.