கனடாவில் ஆண்களை விடவும் ஜனநாயகம் மற்றும் சமூகப் பெறுமதிகளை மதிப்பதில் பெண்கள் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சட்த்தை மதித்தல், பால்நிலை சமத்துவம், பல்வகைமை உள்ளிட்ட பல்வேறு பெறுமதிகளை மதிப்பதில் பெண்கள் முன்னிலை பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பழங்குடியின கலாச்சாரம், இன மற்றும் கலாச்சார பல்வகைமை, பால் நிலை சமத்துவம், மொழியுரிமை, சட்டத்தை மதித்தல், மனித உரிமைகள் உள்ளிட்ட ஏதுக்களின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
86 வீதமான கனடியர்கள் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.