கனடாவின் மொன்றியால் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூடுதலாக தண்ணீர் அருந்த வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்பநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
சராசரியான வெப்பநிலையை விடவும் கூடுதல் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளைய தினம் மொன்றியாலில் அதிகளவு வெப்பநிலை நீடிக்கும் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில் 29.7 பாகை செல்சியஸ் அளவில் காணப்பட்டதே கூடுதல் வெப்பநிலையாக பதிவாகியுள்ளது எனவும், நாளை 33 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகல் நேரங்களில் வழமையான சராசரி வெப்பநிலையை விடவும் பத்து பாகை செல்சியஸ் அளவில் கூடுதலான வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள், மூத்தவர்கள், கர்ப்பிணிகள், நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் திறந்த வெளியில் இருப்பதனை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
அதிகளவில் நீர் பருக வேண்டுமென மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.