நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.
ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதன் புதிய விலை 245 ரூபாவாகும் என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கை கைத்தொழில் தொழிற்சாலை மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, இலங்கை தொழிற்சாலை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 270 ரூபாவாகும் என இலங்கை கனிவள கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்ததற்கு அமைய லங்கா ஐ ஓ சி நிறுவனமும், எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.