இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 28 ஆம் திகதி வரை 516,946 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளின் வருகை
மேலும், இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த சில நாட்களாக வலுவடைந்து வந்த நிலையில் தற்போது பாரிய அளவில் வலுவடைந்துள்ளது.
இதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை, இறக்குமதி கட்டுப்பாடுகள், டொலர் வெளியேற்றத்தை தடுத்தல், கடன் செலுத்தாமை ஆகியன பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.