புதுச்சேரியில் 2 கிலோ பிரியாணியில் கேப்டன் தோனியின் உருவம் வரையப்பட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2 கிலோ பிரியாணியில் தோனி ஓவியம்
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த ஐபிஎல் கோப்பை யாருக்கு என்று உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
நேற்று நடைபெற இருந்த இந்தப்போட்டி மழையால் ரத்தானது. இதனையடுத்து இன்று இப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், 2 கிலோ பிரியாணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார் ஓவியர். புதுச்சேரியைச் சேர்ந்தவர் அறிவழகி.
இவர் ஓவியராக இருந்து வருகிறார். இவர் கோலமாவு கொண்டு காந்தியடிகள், டாக்டர் அப்துல் கலாம், டெண்டுல்கர், டோனி ஆகியோரின் உருவங்களை தத்ரூபமாக வரைந்து அசத்துவார்.
இந்நிலையில், இன்று நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்று 2 கிலோ பிரியாணியில் 2 அடி உயரத்தில் சென்னை கேப்டன் தோனியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஓவியருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.