Sunday, December 3, 2023
spot_img
Homeஇலங்கைவடக்கு மாகாணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த களமிறங்கியுள்ள புலம்பெயர் தமிழர்

வடக்கு மாகாணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த களமிறங்கியுள்ள புலம்பெயர் தமிழர்

தமிழ் இனத்தை கட்டியெழுப்ப வேண்டுமெனில் அதற்கு அடிப்படை கல்வியே என வடக்கிலே மிக முக்கியமான கல்வி நிலையம் சார்ந்து இருக்கக் கூடிய செயற்பாடுகளை உருவாக்க விளைந்து கொண்டிருக்க கூடிய, மானிப்பாய் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட புலம்பெயர் தமிழர் இந்திரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், நாங்கள் எப்படியும் தமிழ் இனத்தை கட்டியெழுப்புவோம். தமிழ் இனத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனில் அதற்கு அடிப்படை கல்வி ஆகும். இங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம். எமது பிள்ளைகளுக்கு திறமை இருக்கிறது, தகமை இருக்கிறது.

எனினும் அரச பல்கலைக்கழகங்களில் அந்தளவிற்கு நுழைவு அனுமதி இல்லை. அதேவேளை தனியார் பல்கலைக்கழகமொன்றை நாட வேண்டும் என்றாலும் கூட வடக்கு, கிழக்கில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழங்கள் இல்லை. தெற்கிற்கு சென்றால் செலவு மிகவும் அதிகம்.

அதனால் தான் நான் முடிவு செய்தேன். இங்கே ஓர் மாற்றம் வர வேண்டும். அது இளைஞர்கள் மத்தியில் வர வேண்டும். எனவே அது கல்வி மூலமாக தான் வரும் என குறிப்பிட்டுள்ளார். 

RELATED ARTICLES

Most Popular