கட்டுகஸ்தோட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் உரையாடிக்கொண்டிருந்த நிலையில், இருவரையும் யுவதியின் உறவினர்கள் அழைத்துச்சென்று யுவதியில் வீட்டில் வைத்து இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
17 வயதுடைய யுவதியும் 18 வயதுடைய குறித்த இளைஞரும் காதலர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யுவதியின் உறவினர்களால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞரை அவரின் வீட்டில் யுவதியின் உறவினர்கள் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் இளைஞரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இளைஞரின் உறவினர்கள் கட்டுகஸ்தோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.
முறைப்பாட்டிற்கு அமையவே யுவதியின் தந்தை, தாய், மற்றும் உறவினர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.