சரிகமப சீசன் 3
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை போல ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது சரிகமப பாடல் நிகழ்ச்சி.
2 சீசன்கள் சூப்பராக முடிந்துவிட்டது, இப்போது 3வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது, இதில் யார் பட்டத்தை வெல்வார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். தற்போது நிகழ்ச்சி இதுவரை அக்ஷயா, ஜீவன் பத்ககுமார், புருஷோத்தமன் மற்றும் லக்ஷ்னா என 4 பைனலிஸ்ட் தேர்வாகியுள்ளனர்.
மேலும் 5வது பைனலிஸ்ட் தேர்வு செய்வார்களா அல்லது இவர்கள் மட்டுமே இறுதிப்போட்டியில் போட்டியிடுவார்களா என்பது தெரியவில்லை.
நாகர்ஜுனா வாழ்க்கை
இந்த சரிகமப பாடல் நிகழ்ச்சியின் மூலம் தனது குடும்ப கஷ்டங்களை தாண்டி பாட வந்தவர் நாகர்ஜுனா. ராமநாதபுரத்தில் ஒரு மீனவர் குடும்பத்தை சேர்ந்தவர், தனது திறமையால் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார்.
இவர் 6வது படிக்கும் போது கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற அவரது தந்தை திரும்ப வரவே இல்லை, பின் எப்படியோ 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.
பின் குடும்ப சூழ்நிலை காரணமாக மீன் பிடிக்க சென்றிருக்கிறார், தனது அக்கா மற்றும் தங்கைக்கு திருமணமும் செய்து வைத்திருக்கிறார்.
நான் பாடகராக வேண்டும் என்பது அப்பாவின் ஆசை, அதனை நிறைவேற்றவே குடும்ப சூழ்நிலைக்காக நான் பாட வந்திருக்கிறேன், கண்டிப்பாக ஜெயிப்பேன் என கூறியிருக்கிறார்.