Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைசமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த சதி – பந்துல

சமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த சதி – பந்துல

சமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக்கு அண்மையில் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இருந்து அரசாங்கம் பாடம் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்றும் பந்துல குணவர்தன கூறினார்.

மேலும் அப்பாவி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் அல்லது சம்பவத்திற்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

Most Popular