Saturday, December 9, 2023
spot_img
Homeகனடாகனடாவில் வாத்துக்களை காப்பாற்றியவருக்கு 8 மாத சிறைத்தண்டனை

கனடாவில் வாத்துக்களை காப்பாற்றியவருக்கு 8 மாத சிறைத்தண்டனை

கனடாவில் வீதியை கடந்த வாத்துக் குடும்பம் ஒன்றை காப்பாற்றும் நோக்கில் வீதி தடத்தை மாற்றிய ட்ரக் சாரதிக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ட்ரக் வண்டியை செலுத்திய போது எதிரில் வாத்துக் குடும்பம் ஒன்று வீதியை கடப்பதனை அவதானித்த சாரதி, தான் செல்ல வேண்டிய வீதி தடத்திலிருந்து விலகி மாற்று வீதித் தடத்தில் வண்டியை செலுத்தியுள்ளார்.

இதன் போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ட்ரக் வண்டியில் மோதுண்டுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்தார்.

விபத்தினை மேற்கொண்ட 48 வயதான எரிக் ரென்டெயூ என்பவருக்கு நீதிமன்றம் எட்டு மாத கால சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

மேலும் மூன்று மாத காலத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்துள்ள. இந்த சம்பவத்தில் 19 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார். 

கியூபெக்கின் வடக்கு மொன்றியலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

Most Popular