Sunday, December 3, 2023
spot_img
Homeகனடாகனடாவின் இந்தப் பகுதியில் காட்டுத் தீயினால் 14000 பேர் இடப்பெயர்வு

கனடாவின் இந்தப் பகுதியில் காட்டுத் தீயினால் 14000 பேர் இடப்பெயர்வு

கனடாவின் ஹாலிபெக்ஸ் பகுதியில் காட்டுத் தீ காரணமாக 14000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடுமையான வெப்பத்துடனான காலநிலை மற்றும் பலத்த காற்று ஆகிய காரணிகளினால் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

காட்டுத்தீ கட்டுக்கு அடங்காத நிலையில் காணப்படுவதாக நகர நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மழை வீழ்ச்சி ஏற்படும் சாத்தியங்கள் இல்லாத காரணத்தினால் காட்டுத் தீ பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு ஒரு வாரம் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு ஹெலிகொப்டர்களும் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

RELATED ARTICLES

Most Popular