Saturday, December 9, 2023
spot_img
Homeஉலகம்அவுஸ்திரேலியாவில் உள்ள பௌத்த விஹாரைக்குள் திருட்டு

அவுஸ்திரேலியாவில் உள்ள பௌத்த விஹாரைக்குள் திருட்டு

அவுஸ்திரேலிய அடிலெய்டில் உள்ள இலங்கையின் பௌத்த விஹாரைக்குள் பிரவேசித்த ஒருவர் வழிபாட்டாளர்கள் வழங்கிய பணத்தை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவர் 3000 அவுஸ்திரேலியா டொலர்களை திருடிச்சென்றுள்ளமை சீசீடிவி கருவியின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் ஏற்கனவே தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள மற்றொரு விஹாரையில் அண்மையில் பணத்தை திருடியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியா விஹாரையில் இருந்து அவர் 800 டொலர்களை திருடிச்சென்றதாக முறையிடப்பட்டிருந்தது.

RELATED ARTICLES

Most Popular