ரஷ்யாவின் தானியங்கள் மற்றும் உர ஏற்றுமதிக்கான தடைகள் தொடர்பில் ஐ.நாவுடன் உடன்படிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், கருங்கடல் தானிய ஒப்பந்தம் செயல்படாது என அந்நாட்டின் வெளியறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், Sergey Lavrov கூறினார்.
அதாவது, கடந்த ஆண்டு ஜூலையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவின் தானியங்கள் மற்றும் உரம் ஏற்றுமதிக்கு 3 ஆண்டுகளுக்கு தடைகள் நீட்டிக்கப்பட்டால், அதை சமாளிக்க ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும். இதற்காக ஐ.நாவுடன் உடன்பாடு எட்டப்பட வேண்டும்.
இந்த நிலையில், நைரோபிக்கு விஜயம் செய்த செர்ஜி லாவ்ரோவ்,
”இந்த மாதம் மாஸ்கோ கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை மேலும் 2 மாதங்களுக்கு, அதாவது ஜூலை 17 வரை நீட்டிக்க தயக்கத்துடன் ஒப்புக்கொண்டது.
எனினும் அதன் சொந்த நலன்களை முன்னேற்ற இன்னும் முன்னேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஒப்பந்தத்தின் கீழ் ஏற்றுமதி செய்யப்பட்ட தானியங்களில் 3% க்கும் குறைவானது உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு சென்றடைவதாகவும் அவர் தெரிவித்தார்.