16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெறவிருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி, மழைக்காரணமாக தடைப்பட்ட நிலையிலேயே ஒத்திவைக்கப்ட்டுள்ளது.
இந்தப் போட்டி நேற்றிரவு 7.30க்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், ஹமதாபாத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழைக் காரணமாக போட்டி தாமதமானது.
முன்னதாக நேற்றிரவு 9.40 மணியளவில் போட்டியை ஆரம்பிக்க முடியுமாயின் 20 ஓவர்கள் விளையாட முடியும் என தீர்மானிக்கப்பட்டது.
போட்டி ஆரம்பமாவதில் இன்னும் தாமதமானால் ஓவர்கள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதேநேரம், நள்ளிரவு 12.06க்கு முன்னதாக போட்டி ஆரம்பிக்கக்கூடிய சூழ்நிலை காணப்பட்டால், குறித்த போட்டி, 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.