எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக புத்த சாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் காவல்துறை, விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நதாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை புத்தசாசன அமைச்சின் நேரடி தலையீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டதாக வியடத்துக்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.