Wednesday, November 29, 2023
spot_img
Homeஉலகம்பிரித்தானிய ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்த ரஷ்யா!

பிரித்தானிய ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்த ரஷ்யா!

ரஷ்யாவின் வான் பாதுகாப்புப்படைகள் பிரித்தானியாவினால் வழங்கப்பட்ட இரண்டு Storm Shadow cruise ரக ஏவுகணைகளை இடைமறித்துள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் இந்த தொலைதூர ஏவுகணைகள் எங்கு இடைமறிக்கப்பட்டன என்பதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லையெனவும் கூறப்படுகின்றது.

மேற்கு நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு 

இந்நிலையில் அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட குறுகிய தூர HIMARS ரக ஏவுகணை மற்றும் HARM ஏவுகணைகளை இடைமறித்துள்ளதுடன், 19 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

இதன்போது நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குமாறு மேற்கு நாடுகளுக்கு வோலோடிமிர் ஜெலென்க்சி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளினையடுத்து இங்கிலாந்து இந்த மாத தொடக்கத்தில் Storm Shadows ஏவுகணைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular