Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைஇலங்கையில் தீவிரம் அடையும் மதவாதம் - தேரர் ஒருவர் அதிரடியாக கைது

இலங்கையில் தீவிரம் அடையும் மதவாதம் – தேரர் ஒருவர் அதிரடியாக கைது

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக வலைதளங்களில் ஆபாசமான வார்த்தைகளை பதிவிட்டு வரும் ராஜாங்கனை சத்தா ரதன தேரரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முறைப்பாட்டிற்கு அமைய கைது

மத நல்லிணக்கம் மற்றும் பௌத்த ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் செய்த முறைப்பாட்டிற்கமைய, குறித்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தேரரின் கருத்துக்களை சிலர் ஏற்றுக் கொண்டாலும் பலர் அதற்கு கடும் எதிர்ப்பும், வெறுப்பும் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular