Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைவானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (21.05.2023)  முதல் இன்று (22.05.2023) காலை 8.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்தும் மழை பெய்யும்

நாட்டின் தென்மேற்குப்பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மேல் மாகாணத்தில் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் அவதானம் 

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பகல் வேளையில் கனத்த மழை பெய்து வருவதன் காரணமாக நீரோடைகள், ஆறுகள் நீர்வீழ்ச்சிகள் ஆகியவை பெருக்கெடுத்துள்ளன.

இதனால் நீரோடைகள் ஆறுகள், மற்றும் நீர்வீழ்ச்சிக்கு சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். 

கடும் மழை பெய்வதனால் ஆற்றில் நீராடுவதனையும் அருகாமையில் செல்வதனையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதே நேரம் பொகவந்தலாவ பகுதியில் நேற்று பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளது. இதனால் கடந்த பல மாதங்களாக வரட்சியில் தாழ்ந்து காணப்பட்ட நீர் மட்டம் தற்போது உயர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

RELATED ARTICLES

Most Popular