பொதுவாகவே இப்போதுள்ளவர்களுக்கு இந்த தொப்பையைக் குறைப்பது பெரும் போராட்டமாகவே இருக்கும். இவ்வாறு அதிகரித்துக் கொண்டு போகும் தொப்பையால் பலரும் பல கேலி கிண்டல்களையும் சந்தித்து வருவார்கள்.
ஒரு சிலர் இந்த தொப்பையைக் குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், தொப்பை குறைந்த பாடாக இருக்காது. தொப்பையைக் குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருவார்கள்.
சிலருக்கு இதற்கு நேரம் இல்லாமல் இருக்கும். அப்படியானவர்கள் தினமும் இந்த பானங்களை குடித்து பாருங்கள் சிறந்த பலன் கிடைக்கும்.
தொப்பையைக் குறைக்க சிறந்த பானம்
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேநீருக்கு பதிலாக கிரீன் டீ குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.
- உடல் எடையைக் குறைப்பதற்கு எலுமிச்சை நீர் மிகவும் பயனுள்ளது. தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாற்றை விட்டு உப்பு கலந்து குடித்தால் உடல் எடையை சட்டெனக் குறையும்.
- நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருள்தான் ஓமம். இதை தினமும் உண்பதால் வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரித்து உடல் எடை குறைக்க உதவும்.
- ஒரு கிளாஸ் தண்ணீரில் அரிசியை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வடிகட்டி குடித்தால் எடையும் தொப்பையும் குறையும்.
- ஒரு கரண்டி பெருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் வடிகட்டி குடித்தால் உடல் எடையை குறைக்கலாம்.