Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைமனைவி, பிள்ளையுடன் உந்துருளியில் பயணித்தவர் சுட்டுக்கொலை!

மனைவி, பிள்ளையுடன் உந்துருளியில் பயணித்தவர் சுட்டுக்கொலை!

ஹம்பாந்தோட்டை, சுச்சி கிராமத்தில் நேற்று (21) இரவு உந்துருளியொன்றில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹக்மன கொடிதுவக்குகே சாகர என்ற 35 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

அவர் தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த நபர், ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொலைக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிணையில் வெளியில் வந்தவரென காவல்துறை தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை கைதுசெய்ய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular