இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளுக்கான இரண்டாவது தீர்மானமிக்க போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக விராட் கோலி 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
விராட் கோலி பெற்றுக்கொண்ட 07ஆவது ஐபிஎல் சதம் இதுவாகும்.
இதன்படி ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்களை அடித்தவர் என்ற சாதனையையும் விராட் கோலி தனதாக்கிக்கொண்டார்.
இவர் 61 பந்துகளில் ஒரு ஆறு ஓட்டம் 13 நான்கு ஓட்டங்கள் அடங்களாக இந்த சதத்தை பெற்றுள்ளார்.
இந்தநிலையில், 198 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக சுப்மன் கில் 104 ஓட்டங்களையும், விஜய் சங்கர் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் பிளே – ஓப் சுற்றுக்கான வாய்ப்பினை பெங்களூர் அணி இழந்துள்ளது.
இதேவேளை, இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக மயங்க் அகர்வால் 83 ஓட்டங்களையும், விவ்ராந்த் சர்மா 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்தநிலையில், 201 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக கெமரூன் கிரீன் 99 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.