Sunday, December 3, 2023
spot_img
Homeஇலங்கைகட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய தம்பதி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய தம்பதி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சார்ஜா நோக்கி செல்வதற்காக வந்த கனேடிய தம்பதியினர் நேற்று விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்பதியிடம் துப்பாக்கி தோட்டாவின் உறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

கம்போடியா பயணத்தின் போது இந்த வெற்று தோட்ட உறை எடுத்து வைத்துக் கொண்டதாக இந்த கனேடிய தம்பதி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

கம்போடியாவிற்கு வரும் எவரும் இவ்வாறானவற்றை எடுக்க முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular