Wednesday, November 29, 2023
spot_img
Homeவிளையாட்டுஉலகப் பிரசித்தமான போட்டியொன்றில் லண்டன் வாழ் இலங்கை தமிழ் சிறுவன்! பின்னணியில் வெளியான காரணம்

உலகப் பிரசித்தமான போட்டியொன்றில் லண்டன் வாழ் இலங்கை தமிழ் சிறுவன்! பின்னணியில் வெளியான காரணம்

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காய் உலகப் பிரசித்தமான மரதன் ஓட்டப் போட்டியில் லண்டன் வாழ் இலங்கை தமிழ் சிறுவன் ஒருவர் பங்குபற்றுகிறார்.

ஸ்கொட்லாந்து நாட்டின் எடின்பரோவில் மே மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறும் உலகப் பிரசித்தமான போட்டியான எடின்பரோ மரதன் விழாவில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெய்ஷால் விஐயராஜா என்ற சிறுவன் பங்குபற்றுகிறார்.

போதைப்பொருள் பாவனை

ஈழத்தில் இளைய சமூகம் போதைப்பொருள் பாவனையால் தம்மையும் தேசத்தையும் அழித்துக்கொள்ளக்கூடாது என்றும் உடலின் நலத்திலும் மருத்துவத்திலும் மிகுந்த அக்கறை கொண்ட தலைமுறையாக வாழவும் வளரவும் வேண்டும் என்பதே இவரின் கோரிக்கையாக உள்ளது. 

இக் கோரிக்கையை மையப்படுத்திய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலகப் பிரசித்தமான போட்டியான எடின்பரோ மரதன் விழாவில் பல பிரச்சித்தமான முக்கிய நபர்களுடன் ஜெய்ஷால் விஐயராஜாவும் பங்குபற்றுகிறார்.

மரதன் ஓட்டப் போட்டி

கிளி பீப்பிள் தொண்டு நிறுவனத்தினை எடின்பரோ மரதன் விழாக்குழுவானது (Edinburgh Marathon Festival-2023 EMF ) அங்கீகரிக்கப்பட்ட Charity யாக முதன்முதலில் ஒரு தமிழர்களின் அமைப்பினை ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உலகப்பிரசித்தி பெற்ற  மரதன் திருவிழாவில் சுமார் 35,000 மரதன் ஓட்டவீரர்களும் 400 அமைப்புக்களும் கலந்துகொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும்.

RELATED ARTICLES

Most Popular