Saturday, December 9, 2023
spot_img
Homeசினிமாதிருமணமாகி 10 வருடம் கழித்து கர்ப்பம்.. கருமுட்டை பற்றிய ரகசியத்தை உடைத்த ராம் சரண் மனைவி

திருமணமாகி 10 வருடம் கழித்து கர்ப்பம்.. கருமுட்டை பற்றிய ரகசியத்தை உடைத்த ராம் சரண் மனைவி

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் ராம் சரண். அவர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து இருந்த நிலையில், அந்த படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆஸ்கார் விழாவில் கலந்துகொள்ள சென்ற ராம் சரண் அமெரிங்க மீடியாக்களில் பேட்டி கொடுத்து அங்கும் பாப்புலர் ஆகிவிட்டார். அதனால் அவர் ஹாலிவுட் படத்திலும் விரைவில் நடிக்க வாய்ப்பிருக்கிறது.

ராம் சரண் மனைவி உபஸ்னா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் தற்போது தான் அவர்கள் முதல் குழந்தை பெறுகின்றனர்.

கருமுட்டை பாதுகாப்பு

இந்நிலையில் தற்போது உபஸ்னா அளித்த பேட்டி ஒன்றில் தாங்கள் திருமணம் ஆன புதிதிலேயே கருமுட்டையை பாதுகாத்ததாக தெரிவித்து இருக்கிறார்.

10 வருடங்களுக்கு பின்பு கர்ப்பம் ஆனதன் ரகசியத்தை அவர் தெரிவித்து இருக்கும் நிலையில் இந்த தகவல் வைரல் ஆகி வருகிறது

RELATED ARTICLES

Most Popular