Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாவது நாள் இன்று

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாவது நாள் இன்று

2009ஆம் ஆண்டு,மே மாதம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின்’ 5ம் நாள் இன்றாகும்.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதற்கமைய, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம, வாருடந்தம் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது.

மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால்முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதனை முன்னிட்டு,முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தி பவணி, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கடந்த 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஊர்திப் பவணியானது,நேற்று யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

பின்னர் மீண்டும் கிளிநொச்சி பரந்தன் ஊடாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் முற்றத்தை எதிர்வரும் 18ஆம் திகதி சென்றடையவுள்ளது.

அன்றைய தினம், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன

RELATED ARTICLES

Most Popular