Thursday, November 30, 2023
spot_img
Homeகனடாகனடாவில் பட்டப்பகலில் நடந்த கோர சம்பவம்

கனடாவில் பட்டப்பகலில் நடந்த கோர சம்பவம்

கனடாவின் ரொறன்ரோவில் பட்டப்பகலில் ஆண் ஒருவர் கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் நடந்த இந்த கோர சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 40 வயதான ரிச்சர்ட் சசாகி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மதியத்திற்கு மேல் சுமார் 1.50 மணியளவில் விக்டோரியா தெருவில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் ரிச்சர்ட் சசாகியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.

இந்த நிலையில், காயங்கள் காரணமாக ரிச்சர்ட் சசாகி மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துள்ளார். தாக்குதலை முன்னெடுத்த நபர் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து நடந்தே தப்பியுள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி, அப்பகுதியில் சில பேர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல்தாரி 20 வயது கடந்த நபர் எனவும், சம்பவத்தின் போது இருண்ட நிற ஆடை உடுத்தியிருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular