நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான துணிவு படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது.
இதையடுத்து அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க போகிறார். இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகுவதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் நேபாளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு அஜித் குமார் தற்போது சென்னை திரும்பியுள்ளார். இதன் பின்னர் திரைப்படத்தில் முழு கவனம் செலுத்த போகிறாராம்.
இந்நிலையில் விடாமுயற்சி படத்திற்காக தாடி எடுத்துவிட்டாராம். இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கப்போவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.