Wednesday, November 29, 2023
spot_img
Homeசினிமாசிறப்பு விருந்தினர் கொடுத்த ஷாக் சரிகமப சீசன் 3-ல் நடந்தது என்ன?

சிறப்பு விருந்தினர் கொடுத்த ஷாக் சரிகமப சீசன் 3-ல் நடந்தது என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப சீசன் 3.

ஸ்ரீனிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க அர்ச்சனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அக்ஷயா, ஜீவன் ஆகியோர் ஏற்கனவே பைனலுக்கு சென்று விட்ட நிலையில் மீதமுள்ள போட்டியாளர்களின் பைனலுக்கு செல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது.

சிறப்பு விருந்தினராக வந்து பாதியில் கிளம்புவதாக ஷாக் கொடுத்த சுசீலா அம்மா, சரிகம சீசன் 3-ல் நடந்தது என்ன? | Saregamapa Season 3 Singer Susheela Round

இந்த நிலையில் இந்த வாரம் பிளாக் அண்ட் வெயிட் ரவுண்ட் நடைபெற உள்ளது. இந்த ரவுண்டில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ சுசீலா அம்மா அவர்கள் பங்கேற்க கார்த்திக் ராஜ், சூரி, பாடகர் யுகேந்திரன் (மலேசியா வாசுதேவனின் மகன்), சாந்தனு மற்றும் ‘கயல்’ அனந்தி ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக தங்களது பட ப்ரோமோஷனுக்காக பங்கேற்கின்றனர்.

போட்டியாளர்கள் பாடும் பாடலை கேட்டு சுசிலா அம்மா கொடுத்த கமெண்ட்டால் இன்ப அதிர்ச்சி அடைந்து லக்ஷனா, ராக வர்ஹினி ஆகியோர் கண் கலக்கியுள்ளனர்.

அதாவது, லக்ஷனா பாடுவதை கேட்ட சுசீலா அம்மா நான் கிளம்பறேன் இந்த பொண்ணு என்ன மாதிரியே பாடுது என பாராட்டியுள்ளார்.

அதே போல் ராக வர்ஷினி பாடிய பாடலை கேட்டு நான் கூட இப்படி பாடி இருக்க மாட்டேன் என பாராட்டியுள்ளார். இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular