Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைகாலிமுகத்திடல்  போராட்டத்தில் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்-நாமல்

காலிமுகத்திடல்  போராட்டத்தில் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்-நாமல்

காலிமுகத்திடல்  போராட்டத்தில் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இந்தக் போராட்டத்தின் அங்கமாக இருந்தவர்களிடம் சில வெளிநாட்டு சக்தியின் பங்கு இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே உரிய நேரத்தில் மேலதிக தகவல்கள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எங்களுடன் இருந்த சக நாடாளுமன்ற உறுப்பினர் கூட இந்த விவரங்களை அம்பலப்படுத்தி புத்தகம் ஒன்றினை எழுதியுள்ளார்.

இவை குறித்த மேலும் விவரங்கள் விரைவில் வெளிவரும். மேலும் தற்போது அரகலையினால் நியமிக்கப்பட்ட அரசாங்கமே எமக்கு இருக்கின்றது.

மேலும் யாரிடமாவது ஊழல் அல்லது மோசடி செய்ததற்கான ஆதாரம் இருந்தால், அவர்கள் முறைபாட்டினை வழங்க வேண்டும் அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்,

RELATED ARTICLES

Most Popular