Sunday, December 3, 2023
spot_img
Homeஇலங்கைகளுத்துறை யுவதியின் சம்பவம் தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு!

களுத்துறை யுவதியின் சம்பவம் தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு!

களுத்துறை யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதான சந்தேக நபரை மே மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை யுவதியின் மரணம் தொடர்பான விசாரணைகளில் அவர் தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியும் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் விசாரணைகளின் போது, உயிரிழந்த யுவதிக்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து கடைசி தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி பிரதான சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யத பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular