Saturday, December 9, 2023
spot_img
Homeஉலகம்ஒன்றாரியோ மாகாணத்தில் மென்பானக் கட்டணங்கள் உயர்வடையும் சாத்தியம்..!

ஒன்றாரியோ மாகாணத்தில் மென்பானக் கட்டணங்கள் உயர்வடையும் சாத்தியம்..!

ஒன்றாரியோ மாகாணத்தில் மென்பானக் கட்டணங்கள் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குளிர்பான வகைகளின் விலைகள் சிறிதளவில் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளிர்பான வகைகளின் கொள்கலன்களை மீள்சுழற்சி செய்வதற்காக கட்டணம் அறவீடு செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி தொடக்கம் மென்பான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, கனடிய மென்பான கொள்கலன் மீள்சுழற்சி நிறுவனம் கட்டணம் அறவீடு செய்ய உள்ளது.

ஒன்றாரியோவில் மென்பானக் கட்டணங்கள் உயரும் சாத்தியம் | Ontario Consumers Could Be Hit With New Fees

இந்தக் கட்டண அறவீட்டுத் தொகையை உற்பத்தி நிறுவனங்கள் நுகர்வோரிடம் அறவீடு செய்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு கொள்கலனுக்கு 1 முதல் 3 சதங்கள் வரையில் கட்டணம் அறவீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒன்றாரியோ மாகாணத்தில் ஒரு ஆண்டில் 1.7 பில்லியன் மென்பான போத்தல்கள் விரயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், மீள்சுழற்சி செய்யும் நோக்கிலும் இவ்வாறு கட்டணம் அறவீடு செய்யப்பட உள்ளது. 

RELATED ARTICLES

Most Popular