விடுதலை
வெற்றிமாறன் சில முக்கிய நாவல்களை தழுவிய கதைகளை படமாக இயக்கி மக்கள் மனதை வென்று வருகிறார். அப்படி அவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் தான் விடுதலை.
காமெடியனாக வலம் வந்த சூரி முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இப்படத்திற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார் என்பதை படக்குழுவே வீடியோவாக வெளியிட்டிருந்தார்கள்.
இப்போது படம் ரிலீஸ் ஆகி வசூலிலும் செம கலெக்ஷன் பெற்று வருகிறது.
ரஜினி வாழ்த்து
இப்போது படத்தை நடிகர் ரஜினியும் அண்மையில் பார்த்துள்ளார். படத்தை பார்த்த அவர் விடுதலை படக்குழுவினரை நேரில் சந்தித்து மனதார பாராட்டியுள்ளார். அதோடு டுவிட்டரிலும் இப்படம் குறித்து டுவிட் செய்துள்ளார்.
இது படக்குழுவினருக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.