Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைவவுனியாவில் நாளை தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடல்!!

வவுனியாவில் நாளை தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடல்!!

வவுனியாவில் சமகால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முகமாக வவுனியாவில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கான ஒன்றுகூடல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வவுனியாவில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில் இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பதிய மாக்ஸிஸ லெனினிச கட்சி என்பனவும் கலந்துகொள்ளவுள்ளது.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள், காணி ஆக்கிரமிப்புக்கள், தமிழர் பாரம்பரியங்களை அழிக்கும் செயற்பாடுகள் உட்பட அரசியல் தீர்வு விடயங்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான கட்டமைப்பாக இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

RELATED ARTICLES

Most Popular